புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சுயதொழில் தொடங்கிப் பயன்பெற படித்த இளைஞர்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த வேலையில்லாத இளைஞர்கள், சுய தொழில் தொடங்கிப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :6 மே 2015, 6:35 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த வேலையில்லாத இளைஞர்கள், சுய தொழில் தொடங்கிப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.

படித்த இளைஞர்களுக்கு முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற சீரிய நோக்கில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் பட்டம், பட்டயம், ஐடிஐ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் செய்ய ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.1 கோடிக்கு மிகாமல் திட்ட மதிப்பீடு இருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் வியாபாரம் சார்ந்த தொழில்கள் செய்ய அதிகபட்சம் ரூ.1 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 லட்சமும், உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் பெற வசதி செய்து தரப்படும்.

இவர்களுக்கு அரசு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் வரை வழங்கப்படும். மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையப் பொது மேலாளரை அணுகிப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.