புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவண்ணாமலை அருகே பைக் மோதி தொழிலாளி சாவு

திருவண்ணாமலை அருகே சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி, பைக் மோதி இறந்தார்.

News image
Updated On :6 மே 2015, 6:37 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலை அருகே சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி, பைக் மோதி இறந்தார்.

திருவண்ணாமலையை அடுத்த புதுமல்லவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அச்சுதன் (65). இவர், செவ்வாய்க்கிழமை (மே 5) இரவு மல்லவாடி பேருந்து நிறுத்தத்தில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து வந்த பைக் அச்சுதன் மீது மோதியது.

படுகாயமடைந்த அவரைப் பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

பைக் ஓட்டி வந்த திருவண்ணாமலையை அடுத்த அருணகிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி செல்வம் (40) படுகாயம் அடைந்தார். இவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.