மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

ஜெயலலிதா விடுதலை, விராலிமலையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது தொடர்பான அறிவுப்புகள் வெளியானதை

News image
Updated On :11 மே 2015, 1:08 pm

சி. உதயகுமார்

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது தொடர்பான அறிவுப்புகள் வெளியானதை தொடர்ந்து விராலிமலையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியதோடு, முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகவும் சென்றனர்.

பெங்களூரு நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் வெளியாகும் என அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் அதிமுகவினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனைத்து தண்டனைகளில் இருந்தும் விடுவிக்க்கப்பட்டார் என தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து கட்சியினர் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் விராலிமலை ஒன்றிய, நகர அதிமுகவினர் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளையும் வழங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் எம். சுப்பையா, ஆத்மாகுழுத்தலைவர் எஸ். பழனியாண்டி ஆகியோர் தலைமையில் விராலிமலையின் முக்கிய வீதிகள் வழியாக அதிமுகவினர் பேரணியாகச் சென்றனர். இதில், நகரச்செயலாளர் எஸ். செந்தில், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆ. பெரியசாமி, ரெ. கிருஷ்ணன், கூட்டுறவு சங்கத்தலைவர் வி. முருகேசன், இயக்குநர் ஜெ. ஆர். அய்யப்பன், எம். முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.