தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை

பாளையங்கோட்டை அருகே கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :12 மே 2015, 2:45 pm

முத்துகுமார்

பாளையங்கோட்டை அருகே கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள படப்பக்குறிச்சி காமராஜர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணி (40). இவரது மனைவி ஜீவா.  தனது உறவினரான சங்கர ஆவுடை என்பவரை கொலை செய்த வழக்கில் ஆயுள்சிறைதண்டனை பெற்ற மணி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலையானார். அதன்பின்பு திருமணம் செய்து வசித்து வந்தார்.

இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வீட்டுக்கு மணி திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது எதிரே பைக்கில் வந்த நபர், அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.