தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மே 28 வரை காவல் நீட்டிப்பு

வேளாண் பொறியியல் துறை அதிகாரி தற்கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப்

News image
Updated On :14 மே 2015, 12:53 pm

முத்துகுமார்

வேளாண் பொறியியல் துறை அதிகாரி தற்கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோருக்கு மே 28 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

திருநெல்வேலியில் வேளாண் பொறியியல் துறையில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் முத்துக்குமாரசாமி (57). இவர்,  கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தச்சநல்லூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இவ் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி, வேளாண் பொறியியல்துறை தலைமை பொறியாளர் மு.செந்தில் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு நீதிமன்ற காவல் முடிந்ததைத் தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் மன்ற நீதித்துறை நடுவர் ராமலிங்கம், விடியோ கான்பிரன்ஸ் மூலம் இருவரிடமும் விசாரணை நடத்தினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு,  பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்தபடி அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், செந்திலும் பதிலளித்தனர். விசாரணையின் முடிவில் இருவருக்கும் மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.