மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

அன்னவாசல் அருகே தொடர் மழை: வீடு இடிந்து விழுந்ததில் தாய், மகன் சாவு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள செங்கிபட்டியில் வியாழக்கிழமை அதிகாலை வீடு இடிந்து விழுந்ததில் தாய், மகன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

News image
Updated On :14 மே 2015, 4:48 am

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள செங்கிபட்டியில் வியாழக்கிழமை அதிகாலை வீடு இடிந்து விழுந்ததில் தாய், மகன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

அன்னவாசல் அருகே உள்ள செங்கிபட்டியைச் சேர்ந்தவர் ராமையா(60) இவரது மனைவி சிகப்பாயி(50) மற்றும் மகன் சிவஜோதிவேல்(28) விவசாய வேலை பார்த்து வருகிறார்கள்.  இந்நிலையில், சிகப்பாயி, சிவஜோதிவேல் ஆகிய இருவரும்  செங்கிபட்டியில் உள்ள இவர்களது  வீட்டில் புதன்கிழமை இரவு தூங்கி கொண்டிருந்தனர். அன்னவாசல் பகுதியில் இரண்டு நாள்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.

இதன் காரணத்தால் பழைய காலத்து ஒட்டு வீடு என்பதால் மழையில் ஊறி இருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை வீட்டின் மேல்பகுதி  இடிந்து வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த சிகப்பாயி, சிவஜோதிவேல் ஆகிய இருவர் மீதும் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். இதுகுறித்து அன்னவாசல் காவல் ஆய்வாளர் ஆர். பாலசுந்தரம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.