அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சாதிய ஒடுக்கு முறை, பொருளாதார சுரண்டலுக்கு எதிராக போராட வேண்டும் :சீத்தாராம்யெச்சூரி 

தீண்டாமை, சாதிய ஒடுக்கு முறை மற்றும் பொருளாதார சுரண்டலுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட வேண்டும் என அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி கேட்டுக் கொண்டார்.  தெரிவித்தார். 

Updated On :18 மே 2015, 5:08 pm

தீண்டாமை, சாதிய ஒடுக்கு முறை மற்றும் பொருளாதார சுரண்டலுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட வேண்டும் என அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி கேட்டுக் கொண்டார்.  தெரிவித்தார்.   

 விருதுநகரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2-வது மாநில மாநாட்டின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நகராட்சி மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி பங்கேற்று பேசுகையில், தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்காமல் சிறந்த இந்தியாவை உருவாக்க முடியாது. அரசியல் கட்சிகள் பல்வேறு தேர்தல் நேர வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால் எதையுமே நிறைவேற்றுவதில்லை.     மக்கள் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் வெளிநாடுகளில் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார்.

இதுவரையில் ஓராண்டில் 18 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இது எதற்காக என்றால் குஜராத்தில் முதல்வராக இருந்த போது மதக்கலவரம் நடைபெற்றது. அப்போது, வெளிநாடுகள் இவருக்கு விசா கொடுக்க மறுத்தது. அப்போது இழந்த வாய்ப்பை நிலைநாட்டி கொள்வதற்காகவே இதுபோன்று செய்கிறார்.    அதேபோல், தமிழகத்திலும் பெரியார் கொண்டு வந்த சுயமரியாதை இயக்கம் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்ற பெரியவர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகளின் பெயர்களையும், கொள்கைகளையும்  வாக்குகள் வாங்குவதற்காகவே அரசியல் கட்சியினர் பயன்படுத்துகின்றனர். அதையடுத்து, அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் மறந்து விடுகின்றனர்.

 அதுபோல், பொதுமக்களுக்கு நிறைவேற்றுவதாக அளித்த எண்ணற்ற வாக்குறுகளையும் நிறைவேற்றுவது கிடையாது.       ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கூட்டணி வைத்துக் கொண்டு மதத்தின் பேரால் பிரிவினையை தூண்டுகிறார்கள். சிறுபான்மையினரை கட்டாயமாக மதமாற்றம் செய்து பதற்றத்தை ஏற்படுத்துவது என்பது அபயாகரமானது ஆகும்.  பொருளாதார ரீதியான  இட ஒதுக்கீட்டு பிரச்னையை ஆதாரிக்கிறோம். தலித்கள் பழங்குடியினர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து,  மற்றவர்களோடு போட்டிபோடும் சூழ்நிலை வரும் வரை ஒடுக்கீடு இருக்க வேண்டும். எனவே தீண்டாமை, சாதிய ஒடுக்கு முறை, பொருளாதார சுரண்டலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே பெரிய மாற்றத்தையும், சமத்துவமான இந்தியாவை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.    

 இந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் பி.சம்பத், அகிலந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் வரதராஜன், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி, மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.