மணக்குள விநாயகர் கோயில் மண்டலாபிஷேகம் அமைச்சர் ராஜவேலு பங்கேற்பு
புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் மண்டலாபிஷேகத்தில் சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு பங்கேற்றார்.


புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் மண்டலாபிஷேகத்தில் சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு பங்கேற்றார்.
மணக்குள விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி நடைபெற்றது. அதனையொட்டி தினந்தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மண்டலாபிஷேகத்தில், அமைச்சர் ராஜவேலு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அவருடன் ஓவிய நுண்கலை குழுவின் தலைவர் மாலதி ராஜவேலு, புதுச்சேரி கூட்டுறவு புத்தக சங்க செயலாளர் கோ.முருகன் சென்றனர். அதனை தொடர்ந்து அமைச்சர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். முன்னதாக கோவில் நிர்வாக அதிகாரி கருணாகரன் மற்றும் கோவில் குருக்கள் அவர்களை வரவேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...