பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.பூஜா 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளார்.
பூஜா மாநில அளவில் 2ம் இடம் பிடித்ததோடு, கடலூர் மாவட்டத்திலும், சிதம்பரம் நகரத்திலும், பள்ளியிலும் முதலிடம் பெற்றுள்ளார்.
சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி எஸ்.பூஜா பொதுத்தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
அவரது மதிப்பெண்கள் தமிழ்-98, ஆங்கிலம்-100, கணிதம்-100, அறிவியல்-100, சமூகஅறிவியல்-100.
மாணவியின் தந்தை பெயர் ஏ.செல்வக்குமார், தாயார் ஜி.சக்தி. ஜி.சக்தி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வராக பணியாற்றுகிறார்.
இதுகுறித்து மாணவி எஸ்.பூஜா செய்தியாளர்களிடையே தெரிவித்து: பள்ளி தாளாளர், துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அளித்த ஊக்கத்தின் பேரில் படித்ததால் அதிகளவில் மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளேன். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் பிளஸ்டூவில் ஏ குருப் எடுத்து படித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து மருத்துவர் ஆகி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது ஆசை என எஸ்.பூஜா தெரிவித்தார். மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவி எஸ்.பூஜாவை, பள்ளி தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன், பள்ளி முதல்வர் ஜி.சக்தி ஆகியோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


