இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஜூன் 4- முதல் 13 ஆம் தேதி வரை  பிரதிஷ்டை தின திருவிழா

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஜூன் 4- ஆம் தேதி (வியாழக்கிழமை) குருவாயூரப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்ட 26-ஆவது ஆண்டு திருவிழா கொண்டாட்டம் தொடங்குகிறது.

News image
Updated On :23 மே 2015, 9:21 am

கண. குறிஞ்சி

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஜூன் 4- ஆம் தேதி (வியாழக்கிழமை) குருவாயூரப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்ட 26-ஆவது ஆண்டு திருவிழா கொண்டாட்டம் தொடங்குகிறது.

விழாவை சபரிமலை பரம்பரை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரூ மகேஷ் மோகனரூ காலை 9 மணி முதல் 11 மணி வரை குருவாயூரப்பனுக்கு சிறப்பு பூஜையும், அபிஷேகமும் செய்து தொடங்கி வைக்கிறார்.

மாலை 7 மணிóக்கு சங்கரி கிருஷ்ணனின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணிக்கு சபரிமலை பரம்பரை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரூ மகேஷ் மோகனரூ திருவிழா கொடியேற்றி வைக்கிறார்.மாலை 7 மணிக்கு ஆனந்த் குழுவினரின் பக்தி இசைக் கச்சேரி நடைபெறும்

6-ஆம் தேதியிலிருந்து 12-ஆம் தேதி வரை தினந்தோறும் காலை 7 மணி முதல் 8 வரைக்கும் ஸ்ரீ மன்  நாராயணிய பாராயணம், 10 மணிக்கு உத்சவ பலி, மாலை 6.50 மணி முதல் 8.15 மணி வரை கலை நிகழ்ச்சிகள் சோபான சங்கீதம், ஓட்டன் துள்ளல், மோகினியாட்டம், வில்லுப்பாட்டு, தாயம்பகா) நடைபெறும். ஜூன் 12-ஆம் தேதி காலை 9 மணிக்கு மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இருந்து குருவாயூரப்பன் ஊர்வலம் திருப்போரூர் அருகேயுள்ள காட்டூர் கிராமத்திற்கு செல்கிறது.

அங்கு கோயிலுக்கு சொந்தமான திருக்குளத்தில் குருவாயூர் உற்சவமூர்த்திக்கு புனித நீராட்டு நடைபெறும் அதைத் தொடர்ந்து அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பிறகு மாலை 7 மணிக்கு மீண்டும் கோயிலை ஊர்வலம் அடையும்.இரவு 9 மணிக்கு கோயிலில் ஏற்றப்பட்ட திருவிழா கொடி இறக்கப்படுகிறது.

ஜூன் 13-ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை குருவாயூரப்பனுக்கு சந்தன அபிஷேகம் (களாபாபிஷேகம்) நடைபெறவுள்ளது.  விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்ப பக்த சபாவினர்

செய்து வருவதாகவும் மேலும் தகவல்களுக்கு 044- 28171197, 2197, 5197 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு  கோயிலின் நிர்வாக அதிகாரி அனிஷ்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.