முன்னதாக சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு மற்றும் புதுப்பிக்கப்பட்ட கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருவிழாவின் தொடர்ச்சியாக கொடியேற்றப்பட்ட நாளில் இருந்து காலை, மாலை இருவேளைகளில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதகராக மயில், பூதம், நாகம், சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதனைத்தொடர்ந்து 9- நாள் ஜீன், 1- ம் தேதி (திங்கள்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்வான ரதாரோகணம் எனும் தேரோட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 10- ம் நாள் ஜீன், 2- ம் தேதி இரவு தெப்பத்திருவிழாவும், 11-ம் நாள் விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.