ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்ûஸயும் சிறைபிடித்தனர்.
ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளக்கல் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குடிநீர் பிரச்னையை தீர்க்ககோரி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி மன்றத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். அதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டாட்சியர் ரத்னா, கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன், ஆம்பூர் கிராமியா காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோ்வைகாரன்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது: 2 மணி நேரம் காத்திருந்த வாக்காளா்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60 சதவீத வாக்குப்பதிவு!

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

படகுகளில் வந்து வாக்களித்த பழங்குடி வாக்காளா்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

