டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருமண ஆசை கூறி மோசம் செய்த இளைஞர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்ணை, திருமண ஆசை வார்த்தை கூறி மோசம் செய்த இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :25 மே 2015, 12:42 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்ணை, திருமண ஆசை வார்த்தை கூறி மோசம் செய்த இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மாத்தூர்-மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகள் செவத்தியம்மாள் (23). இவரும் இதே இடத்தைச் சேர்ந்த ராமர் மகன் பூதராஜா (26) என்பவரும் கடந்த இரு மாதங்களாக செல்போனில் பேசி பழகியுள்ளார்கள். 18-ம் தேதி செவத்தியம்மாளிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பூதராஜா வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தாராம். மீண்டும் 21-ம் தேதி (வியாழக்கிழமை) பலாத்காரம் செய்யும்போது, செவத்தியம்மாளின் தாய் மற்றும் உறவினர்கள் பார்த்துவிட்டார்களாம். இதனையடுத்து பூதராஜா, செவத்தியம்மாளை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துவிட்டுச் சென்றுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு இருவரும் சந்தித்த போது பூதராஜா, செவத்தியம்மாளை திருமணம் செய்து கொள்ள மறுத்திவிட்டாராம். மேலும் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தால் கொலை செய்துவிடுவதாயும் மிரட்டினாராம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செவத்தியம்மாள் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பூதராஜாவைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.