பண மோசடி வழக்கு: ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் ஆஜர்
நரசிம்மா படத்தில் உரிமையாளருக்கான பணம் தராத வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் புதன்கிழமை ஆஜரானார்.


நரசிம்மா படத்தில் உரிமையாளருக்கான பணம் தராத வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் புதன்கிழமை ஆஜரானார்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் 2001-ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்திற்கு நெல்லை மாவட்ட விநியோக உரிமை பெற்றிருந்தார். இதில் இவருக்கும் தயாரிப்பாளர்கள் விஜயகாந்த்-சுதீஷ் ஆகியோருக்கும் ரூ.55 லட்சத்திற்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி நஷ்டம் ஏற்பட்டால் தயாரிப்பாளர் தர வேண்டும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் ரூ.29 லட்சத்திற்கு மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் ரூ.26 லட்சம் மாரியம்மாளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப் பணத்தை விஜயகாந்த்-சுதீஷ் ஆகியோரிடம் திரும்பக் கேட்டபோது, அவர்கள் தர மறுத்துவிட்டார்களாம்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாரியம்மாள், விஜயகாந்த் மற்றும் அவரது மைத்துனர் சுதீஷ் மீது வழக்கு தாக்கல் செய்தார். விஜயகாந்த் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமனறம் விஜகாந்தை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணைக்கு சுதீஷ் ஆஜராகாமல் இருந்தார். இதனையடுத்து நீதிமன்றம் இவருக்கு 10.4.15-ம் தேதி பிடி ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து புதன்கிழமை நீதிபதி பசும்பொன் சண்முகையா முன்னிலையில் சுதீஷ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை 11.6.15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...