மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலை அருகே சாலை விபத்து: ஒருவர் பலி, 2 பேர் பலத்த காயம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை நான்கு வழிச்சாலையில் வெள்ளிக்கிழமை மாலை இரண்டு இருசக்கர...

News image
Updated On :29 மே 2015, 11:28 am

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை நான்கு வழிச்சாலையில் வெள்ளிக்கிழமை மாலை இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது ஆம்னி பேரூந்து மோதிய விபத்தில், நெற்கருது அறுக்கும் வண்டி ஓட்டுநர் உயிரிழந்தார். மற்றோரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பலத்த காயங்களுடன் 108  ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். (காயமடைந்தவர்கள் திருச்சி என்றும், பெயர் குறித்த விபரம் தெரியவில்லை)

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் சிவா(32)  நெற்கருது அறுக்கும் வண்டி ஓட்டுநர். திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சிவா விராலிமலை பகுதியில் உள்ள வயல்களில் நெற்கருது அறுக்கும் பணியில் இருந்த போது மதியஉணவு வாங்குவதற்கு விராலிமலை- திருச்சி நான்கு வழிச்சாலையை சிவா  கடக்க முயன்றுள்ளார் அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேரூந்து தனது கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியுள்ளது. இதில் காயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றோரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பலத்த காயங்களுடன் 108  ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.