எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த 5 இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 5 மீனவர்களை இந்திய கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.

News image
Updated On :29 மே 2015, 9:27 am

செல்வ முத்துகுமாரசாமி

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 5 மீனவர்களை இந்திய கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.

இந்திய கடலோரக் காவல்படையினர் கடலில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாகை மாவட்ட கடல் எல்லையில், நாகைக்கு தென்கிழக்கே 30 கடல் மைல் தூரத்தில் ஒரு பைபர் படகு சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருப்பதைக் கண்டு, அதனருகே காவல்படையினர் சென்றனர். அப்போது அது இலங்கையை சேர்ந்த பைபர் எனவும், அதில் இருந்த 5 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இந்த படகில் இருந்தவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிங்க்ஸ்லீ, சுஜித் பியாந்தே, மகாதேவ், இஜாவ் மகேஷ்குமார், லியோரே ரமேஷ் என்பதும், கடந்த 22-ம் தேதி யாழ்ப்பாணத்திலிருந்து மீன்பிடிக்க புறப்பட்டதும்  விசாரணையில் தெரியவந்தது. இந்த 5 பேரையும் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய பைபர் படகை பறிமுதல் செய்தனர். இவர்களை இந்திய கடலோரக் காவல்படையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை காரைக்கால் மார்க் துறைமுகத்துக்கு அழைத்துவந்தனர். துறைமுகத்தில் வைத்து மீனவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு, இவர்களை நாகை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் கடலோரக் காவல் படையினர் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.