யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியையிடம் செயினை பறித்துக் கொண்டு கல்வீசி தாக்கிய கணவர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியையின் 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு அவரை கல்வீசி தாக்கி

News image
Updated On :1 நவம்பர் 2015, 4:50 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியையின் 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு அவரை கல்வீசி தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடிய கணவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிமேகலை (40). இவர் ரயில் நிலையம் போகும் வழியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஜெயக்குமார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உண்டு. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையை அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் ஜெயக்குமார், ஆராய்ச்சிபட்டி தெருவில் போய் இருந்து கொள்வாராம்.

இன்று திடீரென வீட்டிற்கு வந்த ஜெயக்குமார், மணிமேகலை அணிந்திருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன்றுள்ளார். மணிமேகலை அவரை பறிக்கவிடாமல் தடுக்க எவ்வளவோ முயன்றும் பறித்துக் கொண்டு, வெளியே கிடந்த செங்கலால் மணிமேகலை தலையில் அடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமுற்ற மணிமேகலை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.