யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பேருந்து படியில் பயணம் செய்தவர் தவறி விழுந்து சாவு

விருதுநகரில் பேருந்தில் படியில் பயணம் செய்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார்

News image
Updated On :3 நவம்பர் 2015, 7:42 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி (25). இவரது கணவர் கருப்பசாமி. அக்டோபர் 25-ம் தேதி இரவு கருப்பசாமி, விருதுநகரிலிருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் படியில் நின்று பயணம் செய்துள்ளார்.

அழகாபுரி சாலை, பாவாலி விலக்கு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, படியிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமுற்ற கருப்பசாமி, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.

ஆமத்தூர் காவல் நிலையத்தில் அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார், பேருந்து ஓட்டுநர் சாத்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (56) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.