யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சிகளில் நாளை டெங்கு விழிப்புணர்வு சிறப்புக் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு சிறப்புக் கூட்டத்தை 4-ம் தேதி (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :3 நவம்பர் 2015, 8:06 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு சிறப்புக் கூட்டத்தை 4-ம் தேதி (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து செவ்வாய்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசு ஒழிப்புப் பணிகள், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணிகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக பல்வேறு துறைகள், உள்ளாட்சி அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுவாழ்வுத் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதர இயக்கம் ஆகியவற்றின் கீழ் சமுதாய மக்கள் அமைப்புகளான கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றை டெங்கு விழிப்புணர்வு தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தும் விதமாக நவ.4-ம் தேதி மாலை 3 மணிக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இச் சிறப்புக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.