யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாவட்ட ஓவியப் போட்டி: வி.பி.எம்.எம். மாணவி ஒட்டு மொத்த சாம்பியன்

விருதுநகர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு நடைபெற்ற ஓவியப் போட்டியில், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி மாணவி விஷ்ணுப்பிரியா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றார்.

News image
Updated On :4 நவம்பர் 2015, 6:39 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு நடைபெற்ற ஓவியப் போட்டியில், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி மாணவி விஷ்ணுப்பிரியா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றார்.

தளவாய்புரம், காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப் போட்டியை ராஜபாளையம் சென்ட்ரல் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தியது.

 இதில் மாவட்டம் முழுவதும் இருந்தும் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இவர்களில் வி.பி.எம்.எம். பொறியியல் கல்லூரி மாணவி ரஞ்சிதா முதலிடத்தையும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி அனு நந்தினி இரண்டாம் இடத்தையும், கட்டடக் கலைத் துறை மாணவி சரண்யா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சுகன்யாதேவி, பவித்ரா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.பொறியியல் இறுதியாண்டு மாணவி விஷ்ணுப்பிரியா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றார்.

வெற்றி பெற்ற மாணவிகளை கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர், தாளாளர் பழனிச்செல்வி, இணைத் தாளாளர் வி.பி.எம்.எஸ்.தங்கபிரபு, பொறியியல் கல்லூரி முதல்வர் ராஜசேகரன், இயக்குநர்கள் சபரிமாலா, பத்மநாபன் மற்றும் பேராசிரியர்கள் புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.