தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வடகிழக்கு பருவ மழை தீவரமடைந்தால் சம்பா சாகுபடி துவங்கியது

திண்டிவனம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2015, 8:30 am

சீனிவாசன்

திண்டிவனம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.

திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் ஆதிகமாகவே காணப்பட்டது.ஞாயிற்றுகிழமை நிலவரப்படி மரக்காணத்தில் 100 மி.மீ ரும் திண்டிவனத்தில் 65 மி.மீ மழையும் பதிவானது.

 திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் 10,412 திறந்த வெளி கிணறுகள் மற்றும் 150 ஏரிகள் நீர்பாசனத் தேவைகளை பூர்த்தி செய்கிறது.இம்மழையினால் திறந்த வெளி கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.மேலும் ஏரிகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் கென்னடிஜெபக்குமார் கூறுகையில்,விவசாயிகளுக்கு தேவையான ஆடுதுறை 39 ரகம் நெல் விதைகள் போதிய அளவு விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளது.போதிய அளவு உரம் தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் காம்ளக்ஸ் மற்றும் யூரியா இருப்பு உள்ளது.

விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்தில் அதிக அளவில் இயந்திர நடவு செய்து மகசூலினை அதிகரித்திடலாம்.இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வேளாண் துறை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.