மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

காதலனுடன் பள்ளி மாணவி மாயம்: தந்தை விஷம் குடித்து தற்கொலை

இலுப்பூரில் பள்ளி மாணவி காதலனுடன் மாயமானார். இதனால் மனமுடைந்த பெண்ணின் தந்தை இன்று தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :20 நவம்பர் 2015, 5:23 pm

சி. உதயகுமார்

இலுப்பூரில் பள்ளி மாணவி காதலனுடன் மாயமானார். இதனால் மனமுடைந்த பெண்ணின் தந்தை இன்று தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகேயுள்ள கட்டியக்காரன்பட்டியைச் சேர்ந்த சண்முகம்(40) பூ வியாபாரி, இவரது 17 வயது மகள், இலுப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்தார்.

அதே பகுதியில் இருக்கும் சன்னசி மகன் சின்னத்துரையும்(20) அப்பெண்ணும் காதலித்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி இருவரும் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சண்முகம் தன் மகளை சின்னத்துரை என்பவர் கடத்தி சென்றதாக இலுப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீஸார் சின்னத்துரை மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களாக மகள் கிடைக்காத சோகத்தில் இருந்த சண்முகம் இன்று வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கீரனூர் டிஎஸ்பி,  பி. ஆறுமுகம் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.