அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாபநாசம் கீழ் அணையில் 144 மி.மீ மழை பதிவு: 137 அடியை எட்டியது பாபநாசம் அணை

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. பாபநாசம் கீழ் அணையில் அதிகபட்சமாக 144 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 137 அடியை எட்டியது.

News image
Updated On :29 நவம்பர் 2015, 7:35 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. பாபநாசம் கீழ் அணையில் அதிகபட்சமாக 144 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 137 அடியை எட்டியது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பருவ மழை தொடர்ந்து பெய்ததால் இம்மாவட்டத்தில் சேர்வலாறு, அடவியநயினார், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி  உள்ளிட்ட 7 அணைகள் நிரம்பின. கடந்த 4 தினங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் சனிக்கிழமை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக பாபநாசம் கீழ் அணையில் 144 மி.மீ, பாபநாசம் அணை 29 மி.மீ, சேர்வலாறு அணையில் 23 மி.மீ, கடனாநதி அணையில் 4 மி.மீ, கருப்பாநதி அணையில் 14.5 மி.மீ, அடவிநயினார் அணையில் 13 மி.மீ, தென்காசியில் 4.8 மி.மீ, ஆய்க்குடியில் 3.2 மி.மீ, செங்கோட்டையில் 16 மி.மீ, சிவகிரியில் 3 மி.மீ மழையும் பெய்துள்ளது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1486.71 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 349 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 240.78 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 61.90 கனஅடியும், கருப்பாநதி, அடவிநயினார், வடக்குப் பச்சையாறு அணைகளுக்கு தலா 45 கனஅடியும், நம்பியாறு அணைக்கு விநாடிக்கு 100 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 55 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1.65 அடி உயர்ந்து 137 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 149.93 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 90.85 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 83.50 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 82 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 70.86 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 41 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 132 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 22.96 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 50 அடியாகவும் இருந்தது.

நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்ததால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டன. ஒரு வாரத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்திற்கு ஞாயி்ற்றுக்கிழமை 30 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கடனாநதி அணையில் இருந்து 240.78 கனஅடியும், ராமநதி அணையில் 61.90 கனஅடியும், கருப்பாநதி அணை, அடவிநயினார் அணைகளில் தலா 40 கனஅடியும், நம்பியாறு அணையில் 100 கனஅடியும் உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.