திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

விருதுநகர் மாவட்டத்தில் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு எட்டு நோய்களுக்கான தடுப்பூசி போடும் முகாம் வருகிற வருகிற 7-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 13-ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Updated On :4 அக்டோபர் 2015, 5:18 am

விருதுநகர் மாவட்டத்தில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு எட்டு நோய்களுக்கான தடுப்பூசி போடும் முகாம் வருகிற வருகிற 7-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 13-ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனிச்சாமி தெரிவித்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: மத்திய சுகாதார துறையின் சார்பில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு முழுமையாக தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ஜன்னி, இளம்பிள்ளைவாதம், தட்டம்மை, மஞ்சள் காமலை, மூளைக்காய்ச்சல் மற்றும் காசநோய் ஆகியவைகளை தடுப்பதற்காக போடப்படும் தடுப்பூசி ஆகும்.

 இதில் கட்டுமான பணி நடைபெறும் இடங்கள், செங்கல் சூளைகளில் பணிபுரிகின்றவர்கள், நாடோடிகள், அகதிகள், தொழில் நிமித்தமாக அடிக்கடி இடத்தை மாற்றிக் கொள்கிறவர்கள் ஆகியோரின் குழந்தைகளுக்கு தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி முழுமையாக போடாதவர்கள் இருக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பான கணக்கெடுப்பு அந்தந்த பகுதி அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திர தனுஷ் திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டாம் சுற்று இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் வருகிற 7-ம் தேதி, தொடர்ந்து 13-ம் தேதி வரையில் அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. இதேபோல், நவ.7ல் தொடங்கி, தொடர்ந்து 13-ம் தேதி வரையிலும், டிச.7ல் தொடங்கி, தொடர்ந்து ஒரு வாரமும் 2 வயது குழந்தைகளுக்கான தடுப்பூசி போடப்பட இருக்கிறது.

    அதனால் விடுபட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு, மேற்குறிப்பிட்ட நோய்களில் இருந்து பாதுகாத்துக்  கொள்ளும்மாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.