ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கடலூரில் ஆங்கிலேயர் ஆட்சிக்கால இரும்பு பாலம் உடைந்தது: செம்மண் நீரானது கெடிலம்

கடலூரில் கெடிலம் ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் புதன்கிழமை உடைந்து விழுந்தது.

News image
Updated On :7 அக்டோபர் 2015, 2:56 pm

முத்துகுமார்

கடலூரில் கெடிலம் ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் புதன்கிழமை உடைந்து விழுந்தது.

கடலூர் நகராட்சி எல்லைக்குள் கெடிலம், தென்பெண்ணையாறு பாய்ந்து வங்காளவிரிகுடாவில் கலக்கிறது. இதில், கெடிலம் ஆறு நகராட்சியின் மையப்பகுதியில் பாய்வதால் புதுப்பாளையத்தையும், திருப்பாதிரிபுலியூரையும் இணைக்கும் வகையில் கடந்த 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இரும்பினால் பாலம் அமைக்கப்பட்டது.

பின்னர், இப்பாலம் சிதலமடையத் துவங்கியதும் 1960-ம் ஆண்டு வாக்கில் புதிய பாலம் கட்டப்பட்டது. அண்ணாபாலம் என்றழைக்கப்படும் இப்பாலம் தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
சிதலமடைந்த இரும்பு பாலம் மாநில நெடுஞ்சாலை வசம் உள்ளது. இப்பாலத்தின் மேல் பகுதியில் நகராட்சிக்கான குடிநீர் குழாய்கள், புதைசாக்கடை திட்டத்திற்கான குழாய்கள் மற்றும் தொலைபேசி நிறுவனங்களின் வயர்கள் செல்கின்றன. மேலும், லாரன்ஸ் சாலையில் நடைபாதையில் கடை வைத்திருந்தவர்களுக்கு மாற்று இடமாக பாலத்தில் கடை வைக்கவும் அனுமதிக்கப்பட்டு கடை நடத்தப்பட்டது. இதனால், இப்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு பாதசாரிகள் மட்டுமே நடந்து செல்லும் வகையில் இருந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலத்தில் மேலும் விரிசல் ஏற்படவே பாலத்தில் நடந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.இந்நிலையில் புதன்கிழமை மதியம் பாலத்தின் இருதூண்களுக்கு இடைப்பட்ட சுமார் 15 மீட்டர் பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் வழியாக யாரும் நடந்துச் செல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.

பாலம் உடைந்ததைத் தொடர்ந்து குடிநீர் குழாய்கள் உடைந்தது. அப்போது, ஒரு குழாயிலிருந்து செம்மண் நிறத்தில் தண்ணீர் கொட்டத் துவங்கியது. இந்த தண்ணீரால் கெடிலம் ஆறே செம்மண் நிறத்திற்கு மாறியது. சுமார் 2 நூற்றாண்டுகளைக் கடந்த பாலம் இடிந்து விழுந்ததால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாலத்தை நகரமன்றத் தலைவர் ஆர்.குமரன், ஆணையர் ரா.முருகேசன் மற்றும் கவுன்சிலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.