ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வெளிநாடு சென்று ஒரு பருவம் முடித்த மாணவிக்கு சான்றிதழ்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் மாணவி பாரிஸ் பல்கலைக்கழகத்திற்கு சென்று ஒரு பருவம் படித்து முடித்து வெற்றி பெற்று திரும்பியுள்ளார். இவருக்கு அதற்கான சான்றிதழை செவ்வாய்கிழமை வேந்தர் க.ஸ்ரீதரன் வழங்கினார்.

News image
Updated On :13 அக்டோபர் 2015, 10:22 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் மாணவி பாரிஸ் பல்கலைக்கழகத்திற்கு சென்று ஒரு பருவம் படித்து முடித்து வெற்றி பெற்று திரும்பியுள்ளார். இவருக்கு அதற்கான சான்றிதழை செவ்வாய்கிழமை வேந்தர் க.ஸ்ரீதரன் வழங்கினார்.

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி இந்த மாணவர்கள் ஒரு பருவம் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று படித்து வருகிறார்கள். இதற்கான பயணக் கட்டணம் உள்ளிட்டவற்றை பல்கலைக்கழகம் செலுத்துகிறது.

2015-ல் இறுதியாண்டு பி.டெக். பயோ டெக்னாலஜி படிக்கும் மாணவி ரோகிதா, பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் பல்கலைக்கழகம் சென்று, அதிவேக வளர்ச்சி தொழில் நுட்ப பாடப் பிரிவு பயின்று தேர்ச்சி பெற்று திரும்பியுள்ளார். உலகளவில் பல்வேறு நாடுகளில் இருந்து பாரிஸ் சென்று படிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சான்றிதழை வேந்தர் வழங்கினார்.

மாணவியை வேந்தர் க.ஸ்ரீதரன், இயக்குநர் டாக்டர் எஸ்.சசிஆனந்த், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.