மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலை சுப்பிரமணியர் கோயில் உண்டியல் திறப்பு

புதுக்கோட்டை மாவட்ட தேவஸ்தான திருக்கோயில்களை சேர்ந்த விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோயில்

News image
Updated On :26 அக்டோபர் 2015, 5:22 pm

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்ட தேவஸ்தான திருக்கோயில்களை சேர்ந்த விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோயில் உண்டியல் இன்று திறக்கப்பட்டு காணிக்கையை எண்ணும் பணி மலைக்கோயில் மணிமண்டபத்தில் நடைபெற்றது.

புதுக்கோட்டை தேவஸ்தான திருகோயில்களின் உதவி ஆணையர் ம. ரமேஷ், செயல் அலுவலர் ஆர். கருணாகரன் தலைமையில், இன்று உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது, இதில் ரூ. 3 லட்சத்தி 88 ஆயிரத்து 975 ரொக்கத்தையும், 8 கிராம் தங்கம், 215 கிராம் வெள்ளி, உக்ரைன் கரன்சி 5 ஆயிரத்தில் 2, மலேசியா ரிங்கிட் 50 ல்1, 20 ல் 1, 10 ல் 1, 1 ல் 2-ம் பக்தர்கள் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

மேற்பார்வையாளர் ஆர். மாரிமுத்து, மற்றும் விளக்கு பூஜை மகளிர் குழுவினர், பொதுநல அமைப்பினர்  உள்ளிட்டோர் பங்கேற்று உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.