ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலக சிக்கன நாள் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர், நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சிக்கன நாள் விழா வெள்ளிக்கிழமை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.


ஸ்ரீவில்லிபுத்தூர், நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சிக்கன நாள் விழா வெள்ளிக்கிழமை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான்சேவியர்ராஜ் முன்னிலை வகித்தார்.வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் சுந்தரேஸ்வரி வரவேற்றார்.ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி வாழ்த்துரை வழங்கினார்.
உலக சிக்கன நாளையொட்டி, பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா கோல்டு சங்கத்தின் பட்டயத் தலைவரும், பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளருமான என்.எஸ்.வேலாயுதம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மக்களிடையே சிக்கன உணர்வினை ஏற்படுத்தி, சேமிப்பு பழக்கத்தை வளர்க்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது.இன்றைய சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக, ஆசிரியர்களும் பெற்றோரும் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, அவர்களது சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.
இதன் மூலம் சிறுகச் சிறுக சேமித்த தொகை, பெருந்தொகையாகி அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை மேற்கொள்ள உதவும். மேலும் இந்த சேமிப்பு நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தவும் உதவுகிறது.மக்கள் தங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை, தங்களது குடும்பத்திற்கு பயன்படும் வகையில் சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதால், அந்த தொகைக்கு உத்தரவாதமும், எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பும் கிடைத்திடும்.
மாணவர்கள் இதனை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து முன்னேற்றம் அடைவதுடன் பெற்றோர்களிடமும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா, ஆசிரியைகள் பா.பாத்திமா ஞானம், வே.ராஜேஸ்வரி, ச.பொன்மலர், மாணவர்கள், கிராம கல்விக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் செ.சண்முகநாதன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...