இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் ஒரே நாளில் அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 6.25 அடி உயர்ந்துள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2015, 1:41 pm

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் ஒரே நாளில் அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 6.25 அடி உயர்ந்துள்ளது. பாபநாசம் அணையில் அதிகபட்சம் 93 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பாபநாசம் அணையில் அதிகபட்சம் 93 மி.மீ பதிவாகியுள்ளது.

அணைகள், பிற பகுதியில் பதிவான மழை (மில்லி மீட்டரில்):

பாபநாசம் கீழ் அணை 57, சேர்வலாறு அணை 41, மணிமுத்தாறு அணை 13.6, கடனாநதி அணை 7, ராமநதி அணை 18, கருப்பாநதி அணை 20, குண்டாறு அணை 42, அடவிநயினார் அணை 60, கொடுமுடியாறு அணை 12, பேச்சிப்பாறை அணை 5.2, பெருஞ்சாணி அணை 15.4, கன்னடியன் அணைக்கட்டு 1.2, தென்காசி 15, செங்கோட்டை 39.2, ஆலங்குளம் 1.2, ராதாபுரம் 2, ஆய்க்குடி 10.2, சிவகிரி 1, களக்காடு 5.6, பாளையங்கோட்டை 2, சேரன்மகாதேவி 1, கன்னடின் அணைக்கட்டு 2, ஸ்ரீவைகுண்டம் 18.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் வெள்ளிக்கிழமை மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1513 கன அடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 1100 கன அடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 236 கன அடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 200 கன அடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 46 கன அடியும்,

கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 48 கன அடியும், அடவிநயினார் அணைக்கு 150 கன அடியும் நீர்வரத்து இருந்தது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 73.90 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 89.73 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 62.45 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 61 அடியாகவும், ராமநதி அணையின் 1.50 அடி உயர்ந்து 60 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 59.77 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 6.25 அடி உயர்ந்து 91 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 23.25 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 13.50 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.