யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரே நாளில் 484 அமைப்பு சாரா தொழிலாளர் பதிவு

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் தொழிலாளர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக பதிவு

News image
Updated On :31 அக்டோபர் 2015, 7:29 am

கோ.ஜெயக்குமார்

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் தொழிலாளர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

 முகாமிற்கு மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார்.விருதுநகர் தொழிலாளர் அலுவலர் வ.லீலாவதி வரவேற்றார்.நிகழ்ச்சியில் 205 ஆண் மற்றும் 279 பெண்கள் கலந்து கொண்டு தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். இவர்களுக்கு அடையாள அட்டையை பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:தொழிலாளர் துறை சார்பில் மாவட்டந்தோறும் தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு, இந்த அலுவலகங்கள் மூலம் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்களின் செயல்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் கீழ் கொத்தனார், பிளம்பர், சித்தாள், நிமிந்தாள் உட்பட 30 தொழில்கள் செய்து வரும் தொழிலாளர்களை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்திலும், தமிழ்நாடு அமைப்பு சார தொழிலாளர்கள் நல வாரியத்தின் கீழ் உடலுழைப்பு தொழிலாளர்களான பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழில், தையல், சலவை, பொற்கொல்லர், மண்பாண்டம், விசைத்தறி, சமையல், தெரு வியாபாரம், ஆட்டோ உட்பட 60-க்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து வரும் தொழிலாலர்களை தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியம் மற்றும் இதர 16 நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு உறுப்பினர்களாகச் சேரும் தொழிலாளர்களுக்கு,

இவ்வாரியங்கள் மூலம் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கண் கண்ணாடி உதவித் தொகை, ஓய்வூதியம், இயற்கை மற்றும் விபத்து மரண உதவித் தொகை மற்றும் விபத்து ஊனத் தொகை போன்ற 8 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.