விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மகளிருக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்கும் பயிற்சி

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் சுய தொழில் வளர்ச்சி மையம் ஆகியவை

News image
Updated On :12 செப்டம்பர் 2015, 8:47 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் சுய தொழில் வளர்ச்சி மையம் ஆகியவை இணைந்து மகளிருக்கான வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்கம் பயிற்சியை சனிக்கிழமை நடத்தின.

நிகழ்ச்சிக்கு துணை வேந்தர் ச.சரவணசங்கர் தலைமை தாங்கினார். சுய தொழில் வளர்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் எம்.ஜெயக்குமரன் பயிற்சியைத் தொடங்கி வைத்து, பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார்.

நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பெருமாள் வரவேற்றார்.அருள்மிகு கலசலிங்கம் ஐ.டி.ஐ. பயிற்றுநர் செல்வம், மகளிருக்கு மிக்ஸி, கிரைண்டர், மின் அடுப்பு உள்ளிட்ட பொருட்களில் ஏற்படும் பழுதுகளை நீக்குவதற்கான பயிற்சியை அளித்தார். பயிற்சியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 270 மகளிர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் அருண்பிரசாத் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.