விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விருதுநகர் மாவட்ட 16-வது யோகாசன சாம்பியின் போட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா ம.பொன்னையா யோகாசன சங்கம் சார்பில், விருதுநகர் மாவட்ட 16-வது யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 செப்டம்பர் 2015, 9:15 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா ம.பொன்னையா யோகாசன சங்கம் சார்பில், விருதுநகர் மாவட்ட 16-வது யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கத் தலைவர் ரஞ்சித், டாக்டர் ஜி.கோதண்டராமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் கே.அய்யலுசாமி முன்னிலையில், சங்கத்தின் தலைவர் பொ.மரக்கண்ணு குத்துவிளக்கேற்றி போட்டியைத் தொடங்கி வைத்தார். கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஆர்.ஸ்ரீகுமார், லயன்ஸ் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஏ.சுதாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்தும் 540 மாணவ மாணவியரும், 25 வயது முதல் 107 வயது வரை உள்ள பொதுமக்களும் கலந்து கொண்டனர். 107 வயதுள்ள நெசவுத் தொழிலாளர் கே.குருசாமி போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசைப் பெற்றார். இவருக்கு மாவட்ட தலைவர் அம்பாள் ஆர்.முத்துமணி பரிசு வழங்கினார்.

அதிக அளவு போட்டியில் பங்கேற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் கோப்பையை ஆண்கள் பிரிவில் விருதுநககர் கே.வி.எஸ். மெட்ரிக்லேஷன் மேல்நிலைப் பள்ளியும், பெண்கள் பிரிவுில் விருதுநகர் பி.எஸ்.சிதம்பர நாடார் சீனியர் ஆங்கிலப் பள்ளியும் பெற்றன.

இவர்களுக்கு இண்டர்நேஷனல் யோகா பெடரேசன் உதவிச் செயலாளரும், அகில இந்திய யோகா பெடரேசன் செயலாளருமான யோகிராஜ் என்.ராமலிங்கம் பரிசுகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கே.அய்யலுசாமி, தலைவர் பொ.மரக்கண்ணு ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.