மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

அன்னவாசல் அருகே கிணற்றுக்குள் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

அன்னவாசல் அருகே சனிக்கிழமை இரவு 50 அடி கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் இன்று உயிருடன் மீட்டனர்.

News image
Updated On :13 செப்டம்பர் 2015, 5:20 pm

சி. உதயகுமார்

அன்னவாசல் அருகே சனிக்கிழமை இரவு 50 அடி கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் இன்று உயிருடன் மீட்டனர்.

அன்னவாசல் அருகே உள்ள வேளம்பட்டி அந்தமான் தோட்டத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு சொந்தமான பசுமாடு சனிக்கிழமை முதல் காணவில்லையாம். அக்கம்பக்கம் தேடி வந்த நிலையில், இன்று அவரது தோட்டத்து கிணற்றுக்குள் இருந்து வந்த சத்தத்தைத் தொடர்ந்து மாடு கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

உடனே இலுப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நிலைய அலுவலர் சி. காமராஜ் தலைமையில் வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் பசு மாட்டை உயிருடன் மீட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.