மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலையில் மகனை காணவில்லை என தாய் காவல் நிலையத்தில் புகார்

இந்நிலையில் இன்று காலையில் பார்த்தப்போது பாலசுப்பிரமணியை காணவில்லையாம் பல்வேறு இடங்களில் தேடியும்

News image
Updated On :13 செப்டம்பர் 2015, 4:49 pm

சி. உதயகுமார்

விராலிமலை அருகே மகனை காணவில்லை என்று  விராலிமலை காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்துள்ளார்

விராலிமலை அருகே உள்ள கல்குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் பாலசுப்பிரமணியன்(19). 10 ம் வகுப்பு வரை படித்த இவர் தந்தை காலமானதை தொடர்ந்து அருகில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த போது அங்கு ஏற்பட்ட விபத்தில் தனது ஒரு காலை இழந்துள்ளார். பின்னர் வேலைக்கு செல்ல முடியாமல் தன் தாய் பார்வதியுடன் வீட்டிலேயே இருந்து வந்த பாலசுப்பிரமணியன் வழக்கம் போல் சனிக்கிழமை வீட்டுத்திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலையில் பார்த்தப்போது பாலசுப்பிரமணியை காணவில்லையாம் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் விராலிமலை காவல் நிலையத்தில் பார்வதி அளித்த புகாரினைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.