கொதிக்கும் பால் கொட்டியதால் சிறுமி பரிதாப பலி
தேனீர்க்கடையில் கொதிக்கவைத்திருந்த பால் பாத்திரம் நிலை தடுமாறி கொட்டியதால் பலத்த காயமடைந்த சிறுமி தஞ்சை மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
தேனீர்க்கடையில் கொதிக்கவைத்திருந்த பால் பாத்திரம் நிலை தடுமாறி கொட்டியதால் பலத்த காயமடைந்த சிறுமி தஞ்சை மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் செந்தில்குமாரின் மகள் சீதாலெட்சுமி(11). அங்குள்ள அரசுப் பள்ளியில் 7 -ம் வகுப்பு படித்துவந்த இவர் சனிக்கிழமை தேனீர் வாங்குவதற்காக அந்த ஊரில் இருந்த கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, கடையில் உள்ள அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பால் பாத்திரம் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அருகே நின்றிருந்த சிறுமி சீதாலெட்சுமி மீது கொட்டிடயது. இதனால் படுகாயம் அடைந்த சிறுமிதஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பலனின்றி திங்கல்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கோட்டைப்பட்டினம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

