இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே மோதல்: வீடியோ இணைப்பு

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திடீரென பங்கேற்பாளர்களுக்கு இடையில் நேற்று கைகலப்பு ஏற்பட்டது.இதன் வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகை இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திடீரென பங்கேற்பாளர்களுக்கு இடையில் நேற்று கைகலப்பு ஏற்பட்டது.இதன் வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகை இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎன்7 என்ற இந்தி தொலைக்காட்சியில் நேற்றிரவு சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா குறித்து நேரலையாக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்நிகழ்ச்சியில்  பங்கேற்ற ஓம் ஜி என்ற சாமியார், மற்றொரு பங்கேற்பாளரான ஜோதிடர் ராக்கி பாய் என்ற பெண்ணிடம் கடுமையான வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் திடீர் என  ராக்கி பாய் பேசிக்கொண்டிருந்த போதே, மற்றொரு பங்கேற்பாளரான தீபா சர்மா என்ற பெண்ணை குறிப்பிட்டு பேசிய ஓம் ஜி , அவரது வாழ்க்கை குறித்தும், அவர் மீதான குற்ற வழக்குகள் குறித்தும் விமர்சித்தார்.இதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த தீபா சர்மா, திடிரென ஓம் ஜி அருகே சென்று அடிக்க தொடங்கினார்.

இதையடுத்து  இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இந்த காட்சி பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்கேற்பாளர்களின் நடத்தையை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், அவர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்வதாகவும், ஐபிஎன்7 தொலைக்காட்சி கூறியுள்ளது.

</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.