அர்னாப் vs வளிமண்டல சுழற்சி! அடுத்த 2 - 3 நாள்கள் சென்னை எப்படி இருக்கப்போகிறது?
அர்னாப் vs வளிமண்டல சுழற்சிக்கு இடையே மோதல் அடுத்த 2 - 3 நாள்கள் எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி..

தமிழகத்துக்கு அருகே நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஆகியவற்றின் காரணமாக எந்தவிதமான மழைப்பொழிவு இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்துக்கு அருகே குமரிக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியும் நிலவி வருகிறது.
இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் நாள்கள் எப்படியிருக்கப் போகிறது என்பது பற்றி பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருப்பது என்னவென்றால்,
வானிலை கண்காணிப்பு - புயல் சின்னமாக உருவாகும் 'அர்னாப்' (CYCLONE ARNAB) vs அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சிக்கு இடையே இயற்கையின் அதிரடி மோதல் தொடங்கவிருக்கிறது.
வங்கக் கடலிலிருந்து 'அர்னாப்' உள்ளே என்ட்ரி கொடுக்கிறார். மறுபுறம், அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பாதை பதிலடி கொடுக்கிறது.
இந்த மோதலில் 'அர்னாப்' வெற்றி பெறுகிறார்! அவர் அரபிக்கடலில் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பாதையை தன் பக்கம் இழுத்து, இறுதியில் அதை முழுமையாக உள்வாங்கிக் கொள்கிறார்.
இதன் விளைவு எப்படி இருக்கும்?
அடுத்த 2–3 நாள்களுக்குத் தமிழ்நாட்டில் வானிலை மிகவும் தீவிரமாக இருக்கப்போகிறது! அடுத்த சில நாள்களில் என்ன நடக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள, கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பாருங்கள்!
இந்தப்பதிவு, இருபுறமும் உருவாகும் வானிலை அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் மக்களும் புரிந்துகொள்ளும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்று பதிவிட்டிருக்கிறார்.
Summary
Arnab vs ARABIAN SEA LOW! What will Chennai be like over the next 2–3 days?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

