சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோரத்தில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கிழக்கு திசை நோக்கி நகர்ந்ததால் வாபஸ்...

சென்னையில் தேங்கிய மழை நீர் / வானிலை ஆய்வு மைய அறிவிப்பு - எக்ஸ்

Updated On :

சென்னைக்கு விடுக்கப்பட்ட அதிகனமழைக்கான ரெட் அலர்ட் திரும்பப் (வாபஸ்) பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோரத்தில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கிழக்கு திசை நோக்கி நகர்ந்ததால் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

எனினும், சென்னையில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழக பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு கடலோர ஆந்திர மாநிலப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனடியாக உஷார்படுத்தும் நவீன தொழில்நுட்ப முறைப்படி, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து செல்போன் எண்களுக்கும் எச்சரிக்கை ஒலியுடன் கூடிய அவசரகாலக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது.

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Summary

Red alert issued for Chennai withdrawn! Meteorological Department

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER