அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!
வேளச்சேரியில் ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ள நிலையில், மேலும் 3 குழுக்கள் வரவுள்ளது குறித்து...

தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு - கோப்புப் படம்
சென்னைக்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வரவழைக்கப்படவுள்ளது.
முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் படை காரணமாக அரக்கோணத்தில் இருந்து 3 குழுக்களைச் சேர்ந்த 90 வீரர்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
வேளச்சேரியில் ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புக் குழு ஒன்று தயார் நிலையில் உள்ள நிலையில், மேலும் மூன்று குழுக்கள் சென்னைக்கு வரவுள்ளனர்.
மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் உத்தரவைத் தொடர்ந்து சென்னைக்கு 3 குழுக்கள் அனுப்பிஐக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்குத் தேவையான படகுகள், கயிறு உள்ளிட்ட உபகரணங்களுடன் பேரிடர் மீட்புக் குழு சென்னை வரவுள்ளது.
தமிழக பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு கடலோர ஆந்திர மாநிலப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனடியாக உஷார்படுத்தும் நவீன தொழில்நுட்ப முறைப்படி, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து செல்போன் எண்களுக்கும் எச்சரிக்கை ஒலியுடன் கூடிய அவசரகாலக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் குறுஞ்செய்தியில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Summary
Heavy rain warning National Disaster Response Force rushed to Chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


