தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு!
அதிகபட்சமாக சென்னை பாரிமுனையில் 361.9 மி.மீ. மழை பதிவானது தொடர்பாக...

மழை - கோப்புப்படம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (காலை 8.30 மணி வரையிலான) பெய்த மழை நிலவரத்தைப் பார்க்கும்போது, சென்னையின் பெரும்பாலான இடங்களில் அதிகனமழை பெய்து இருக்கின்றது.
தமிழக பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு கடலோர ஆந்திர மாநிலப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதேபோல், லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் வரை, கேரளம் மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால் நேற்று (அக். 17) சென்னையில் பல பகுதிகளில் அதிகனமழை பெய்தது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (காலை 8.30 மணி வரையிலான) பெய்த மழை அளவு:
முதல் 10 இடங்களும் சென்னையில்தான் பதிவாகியுள்ளன. முதலிடத்தில் சென்னை ராயபுரம் மண்டலம் பாரிமுனை பகுதியில் 361.9 மி.மீ மழையும், இரண்டாம் இடத்தில் கத்திவாக்கம் பகுதியில் 344.4 மி.மீ மழையும், மூன்றாம் இடத்தில் சாத்தங்காடு 260 மி.மீ மழையும், நான்காம் இடத்தில் திருவொற்றியூர் பகுதியில் 223.8 மி.மீ மழையும், ஐந்தாம் இடத்தில் எண்ணூர் பகுதியில் 215.0 மி.மீ மழையும் பதிவாகின.
இதைத் தொடர்ந்து, 6-வது இடத்தில் கார்கில் நகர் பகுதியில் 192.2 மி.மீ, 7-வது இடத்தில் கோடம்பாக்கம் பகுதியில் 185.2 மி.மீ, 8-வது இடத்தில் தண்டையார்பேட்டை பகுதியில் 182.4 மி.மீ, 9-வது இடத்தில் பெரம்பூர் பகுதியில் 181.3 மி.மீ, 10-வது இடத்தில் கல்லறைச் சாலை பகுதியில் 179.4 மி.மீ மழை பதிவாகின.
சென்னையில் இன்று(அக்.18) அதி கனமழை பெய்வதற்கான ரெட் நிற எச்சரிக்கையும் செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
Summary
Looking at the rainfall situation in Tamil Nadu in the last 24 hours (up to 8.30 am), most places in Chennai have received heavy rainfall.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


