பாரீஸில் 250 மி.மீ. மழை... சென்னையில் மேகவெடிப்பு! வெளுத்துவாங்கும் கனமழை!
சென்னையில் பெய்து வரும் கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது...

சென்னையில் கனமழை... - (கோப்புப் படம்)
சென்னையில் சனிக்கிழமை பெய்து வரும் கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட ஏராளமான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
சென்னையில், வெள்ளிக்கிழமை (அக். 16) மாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், சனிக்கிழமை காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது.
சனிக்கிழமை மாலை 5 மணியளவில் பெரம்பூர், தண்டையார்பேட்டை, பாரீஸ், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதில் குறிப்பாக, வடசென்னையில் கனமழையின் தாக்கம் அதிகளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பாரீஸ் பகுதியில் இதுவரை 250 மி.மீ.-க்கும் அதிகமான மழைப் பொழிவு பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், திருவள்ளூரில் 101 மி.மீ. மழையும், காஞ்சிபுரத்தில் 90 மி.மீ. மழையும் பெய்திருப்பது பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னையின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், வடசென்னை பகுதிகளை நோக்கி புதிய மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருவதால் மீண்டும் அப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும்; இதனால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்புடன் இருக்குமாறு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Summary
Reports indicate that a cloudburst is the reason for the heavy rainfall currently occurring in Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


