தமிழ்நாட்டில் தீபாவளி அன்று 8 கொலைகள்!தேனியில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்தவர்களை கண்டித்த எஸ்.ஐ. படுகொலை!காற்று மாசு! சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!இஸ்ரேலில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் காடி ஐசென்கோட்!

சென்னை, புறநகருக்கு மழையிலிருந்து இடைவெளி!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த சில நாள்கள் மழை பெய்ய வாய்ப்பில்லை....

rain

மழை - பிரதிப் படம்

Updated On :

சென்னையில் அடுத்த சில நாள்கள் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு எல்-நினோ நிபுணர் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தீபாவளி நாளான நேற்று காலை முதலே விட்டு விட்டு கனமழை பெய்தது.

இந்த நிலையில், மழை நிலவரம் குறித்து பிரதீப் ஜான் திங்கள்கிழமை வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“சென்னையில் அடுத்த சில நாள்களுக்கு மழை இடைவெளி இருக்கும். ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கிழக்கு திசை காற்று அலையின் தாக்கத்தால் நல்ல மழை பதிவாகியுள்ளது. இதில் வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

09.11.2026 அன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பதிவான மழையளவு.

சென்னையில் அதிகபட்சமாக எம்.ஜி.ஆர். நகரில் 50.8 மி.மீ., பள்ளிக்கரணையில் 43.2 மி.மீ., முல்லை நகரில் 42.8 மி.மீ. மழையும், திருவள்ளூர் மனவூரில் 62.4 மி.மீ., செங்குன்றத்தில் 52.6 மி.மீ., ஆவடியில் 51 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 39.6 மி.மீ. மழையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பொழிச்சலூரில் 26.0 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Summary

A break from the rain for Chennai and suburbans!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.