சென்னையில் 30 நிமிடங்களில் 40 மி.மீ. பெய்த மழை! எங்கே தெரியுமா?
சென்னையில் 30 நிமிடங்களில் 40 மி.மீ. பெய்த மழை குறித்து...

மழை - கோப்புப்படம்
அம்பத்தூர் மற்றும் அயப்பாக்கம் பகுதிகளில் 30 நிமிடங்களில் 40 மி.மீ. மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் வெளியிடும் தனியார் வானிலை ஆய்வாளரும் எல்-நினோ வல்லுநர் குழு உறுப்பினருமான பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:
”சென்னையின் மேற்குப் பகுதியின் பல இடங்களில் இன்று(அக். 15) பலத்த மழை பெய்தது. சென்னையில் உள்ள ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அம்பத்தூர் மற்றும் அயப்பாக்கம் பகுதிகளில் 30 நிமிடங்களில் 40 மி.மீ. மழை பெய்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை இன்று, (அக். 15) நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாக விலகியது. அதே நேரத்தில், வடகிழக்கு திசை காற்று தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் வீசத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகம், கேரளம், மாஹே ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Tamil Nadu Weatherman Pradeep John has stated that 40 mm of rain fell in the Ambattur and Ayappakkam areas within 30 minutes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


