ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

வேலைவாய்ப்பு, மேம்பாட்டுத் திட்ட பலன்கள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய வேண்டும்: அமித் ஷா

வேலைவாய்ப்பு, மேம்பாட்டுத் திட்ட பலன்கள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய வேண்டும் என அமித் ஷா பேசியிருப்பது குறித்து...

Union Home Minister Amit Shah inaugurated the campus of the 12th Battalion of the National Disaster Response Force in Hollongi

அருணாச்சலப் பிரதேசத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 12-ஆவது பட்டாலியன் வளாகத்தை திறந்து வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - எக்ஸ்

Updated On :

வேலைவாய்ப்புகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் பலன்கள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதி செய்யுமாறு மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகருக்கு அருகிலுள்ள ஹோலோங்கியில்,தேசிய பேரிடர் மீட்புப் படையின் 12-ஆவது பட்டாலியன் வளாகத்தை ஞாயிற்றுக்கிழமை அமித் ஷா திறந்து வைத்து பேசினார்.

அப்போது, இந்த புதிய வளாகம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பிற பகுதிகளில் பேரிடர் மேலாண்மை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் தயார்நிலை மற்றும் மீட்புத் திறன்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இயற்கை பேரிடர்களுக்கு அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதி வடகிழக்கு பிராந்தியம் என்று குறிப்பிட்ட அமித் ஷா, இந்த பட்டாலியன் அருணாச்சலப் பிரதேசத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியம் மற்றும் அண்டை பகுதிகளுக்கும் சேவையாற்றும். அதாவது பேரிடர் மீட்பின் தயார்நிலையை வலுப்படுத்துதல், பொருளாதாரச் சுயசார்பை ஊக்குவித்தல் மற்றும் சிறந்த வாழ்வாதார வாய்ப்புகளை உறுதி செய்தல் ஆகியவை அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியில் முக்கியமான முன்னுரிமைகளாக இருக்கும் என்று அமித் ஷா கூறினார்.

மேலும், இட்டாநகர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நீச்சல் ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வகையில், ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளத்தை இலவசமாகத் திறந்து வைக்க தேசிய பேரிடர் மீட்புப் படை தலைமை இயக்குநரின் முயற்சியை அமித் ஷா பாராட்டினார்.

முன்னதாக, இட்டாநகரில் உள்ள டோர்ஜி காண்டு மாநில மாநாட்டு மையத்தில், 'அருணாச்சலப் பிரதேச கூட்டுறவு தொலைநோக்கு ஆவணம் 2027'-ஐ அமித் ஷா வெளியிட்டார்; மேலும் 'சரஸ் மேளா' கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பேசியவர், அருணாச்சலப் பிரதேச விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்யுமாறு ராணுவம் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த முயற்சி உள்ளூர் விவசாயிகளுக்குச் சிறந்த சந்தை வாய்ப்புகளையும் நிதி பலன்களை வழங்குவதோடு, பாதுகாப்புப் படையினருக்குத் தரமான பொருள்கள் கிடைப்பதையும் உறுதி செய்யும். இத்தகைய முன்னெடுப்புகள் பாதுகாப்புப் படையினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுயசார்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், 'சுவாலம்பன் யோஜனா' போன்ற திட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம் மாநிலமும் நாடும் முன்னேற வேண்டும் என்று கூறினார். வேலைவாய்ப்புகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் பலன்கள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதி செய்யுமாறு மாநில அரசை அவர் கேட்டுக்கொண்டார்.

Union Home Minister Amit Shah inaugurated the campus of the 12th Battalion of the National Disaster Response Force in Hollongi, near Itanagar in Arunachal Pradesh today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.