வாட்ஸ் அப் குரூப் வழியாக கேரள இளைஞருக்கு ஐ.எஸ். இயக்கம் அழைப்பு
கேரளாவில் வசிக்கும் வாலிபர் ஒருவரை ஐஎஸ் பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் தங்கள் வாட்ஸ்-அப் குரூப்பில் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் வசிக்கும் வாலிபர் ஒருவரை ஐஎஸ் பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் தங்கள் வாட்ஸ்-அப் குரூப்பில் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு நகரை சேர்ந்த இளைஞர் ஒருவரின் வாட்ஸ்-அப்புக்கு, 'வெல்கம் டூ தவ்லதுல் இஸ்லாம் த்வா குரூப்' என்று முதலில் ஒரு மெசேஜ் வந்துள்ளது.
மேலும், 'அசலாமு அலேக்கும்' என்ற வார்த்தையுள்ள மெசேஜும் மறுநாள் வந்துள்ளது. இந்த மெசேஜ்களை பார்த்த இளைஞர், நீங்கள் யார் என்று கேட்டபோது, 'இஸ்லாமிக் ஸ்டேட்டை சேர்ந்த ஷமி' என்று பதிலில் கூறப்பட்டிருந்தது.
மேலும், அரபிக் மொழியில், ஒரு ஆடியோ ஃபைலும் வந்தது. குரூப்பின் பெயர் ஐஎஸ் என்றும், முகப்பு படத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கொடியும் இடம் பெற்றிருந்ததால் இந்த இளைஞர் குரூப்பை விட்டு வெளியேறிவிட்டு நகர சைபர் கிரைம்க்கு இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
முன்னதாக, அந்த வாட்ஸ் அப் குரூப்பில் பரிமாறப்பட்ட தகவல்களை அந்த இளைஞர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஆதாரத்திற்கு வைத்துக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

