விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் அண்ணா பிறந்தநாள் விழா: மீண்டு அதிமுக ஆட்சி அமைய தொண்டர்கள் உறுதிமொழி ஏற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அதிமுக சார்பில், அண்ணா பிறந்தநாள் விழா செவ்வாய்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 செப்டம்பர் 2015, 8:52 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அதிமுக சார்பில், அண்ணா பிறந்தநாள் விழா செவ்வாய்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், மாவட்ட ஜெயலலலிதா பேரவை அவைத் தலைவர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தலைமையில் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைய ஒற்றுமையுடன் பாடுபடுவோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

கட்சியின் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து ஆகியோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் தேரடி திடலில் இருந்து பேரணியாக பேருந்து நிலையம் வந்தனர்.

அங்குள்ள அண்ணா சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து, பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். பின்னர் அனைவரும் அதிமுக அரசு நிகழ்த்தியிருக்கும் மகத்தான சாதனைகளை தமிழக மக்கள் அனைவருக்கும் எடுத்துக் கூறி, ஒற்றுமையுடன் உழைத்து வரும் சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்வோம் என்றும், மீண்டும் மக்கள் விரும்பும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்குவோம் என்றும் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு நிகழ்த்தியுள்ள சாதனைகளை விளக்கும் வண்ணமிகு துண்டு பிரசுரத்தை நகர் மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி வெளியிட, முதல் பிரதியை நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் பெற்றுக் கொண்டார். இவை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி முழுவதும் வீடு வீடாக விநியோகிக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் கட்சியின் தொகுதி செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், ஒன்றியக் குழு உறுப்பினர் சிந்து முருகன், நகர்மன்ற உறுப்பினர் மீராதனலட்சுமி, அரசு வழக்குரைஞர்கள் அ.மங்களசாமி, எம்.ஜெகதீசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகரின் 33 வார்டுகளிலும் அண்ணாவின் உருவப் படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.