விராலிமலையில் புதிய ஐடிஐ: இடம் தேர்வு பணி தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தமிழக அரசின் தொழிற் பயிற்சி நிலையம்(ஐடிஐ) ரூ. 9 கோடியில் அமையவுள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தமிழக அரசின் தொழிற் பயிற்சி நிலையம்(ஐடிஐ) ரூ. 9 கோடியில் அமையவுள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
விராலிமலை மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப் பகுதி மாணவர்கள், தொழிற்கல்வி பயில திருச்சி,புதுக்கோட்டையில் உள்ள தொழிற் பயிற்சி நிலையத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது.
விராலிமலை பகுதியில் அரசு தொழிற் பயிற்சி நிலையம் அமைய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த செப், 15 ம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ஜெயலலிதா விராலிமலையில் புதிய ஐடிஐ அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, விராலிமலை பகுதிகளில் இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
கோட்டாட்சியர் மு. வடிவேல்பிரபு, வட்டாட்சியர் எஸ். பி. மனோகரன், துணைவட்டாட்சியர் கே. தமிழ்மணி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு இடம் தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
சுமார் 4 முதல் 5 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது 6-க்கும் மேற்பட்ட தொழிற் பிரிவுகள் மூலம் ஆண்டுக்கு 200 பேர் தொழிற்கல்வி பயில இதன் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...