நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து வாகனம்-லாரி மோதல்: போலீஸார் சாவு: 2 காவல்துறையினர் காயம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை நெடுஞ்சாலை ரோந்து....


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வாகனம், சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மோதிய விபத்தில் ஒரு போலீஸார் உயிரிழந்தார். இரு காவல் துறையினர் காயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் அய்யனார் தலைமையில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி விலக்கை தாண்டி வந்து கொண்டிருந்தது. வாகனத்தை தலைமைக் காவலர் பிள்ளையார்நத்தம், சங்கரப்பநாயக்கர் மகன் சுந்தர்ராஜ் (48) ஓட்டி வந்துள்ளார்.
அப்போது எதிர் திசையில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்நதது. ஒரு திருப்பத்தில் லாரி வலது பக்கம் ஏறிச் சென்றது. அப்போது நெடுஞ்சாலை ரோந்து வாகனம் லாரியின் பின்பக்கம் மோதியுள்ளது. இதில் வாகனத்தில் வந்த மல்லி காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்த பரமசிவம் மகன் ஏழையின்செல்வன் (53) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனம் ஓட்டி வந்த சுந்தர்ராஜ், சிறப்பு சார்பு ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இது குறித்து கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் அய்யனார் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த டிரைவரைத் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...