தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

ஊழல் வழக்கு: ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை

வருவாய்க்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக  ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீது புகார் எழுந்ததையடுத்து அவரது வீடுகளில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

Updated On :

வருவாய்க்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக  ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீது புகார் எழுந்ததையடுத்து அவரது வீடுகளில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஹிமாச்சல பிரதேச மாநில முதல்வராக  இருப்பவர், வீரபத்ர சிங். இவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வந்த புகார்களை தொடர்ந்து இன்று காலை முதல் வீரபத்ரசிங் வீடுகளில், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறார்கள். வீரபத்ரசிங்கின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை காலை முதல் தொடர்ந்து நடந்துவருகிறது.

வீரபத்ரசிங்கின் தனிச்செயலாளரிடமும் அமலாக்கப்பிரிவு விசாணை நடத்தி வருகிறது. வீரபத்ரசிங்கிற்கு சொந்தமான இடங்களில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.