ஸ்ரீவில்லிபுத்தூரில் சுகாதார விழிப்புணர்வு பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில், மாணவ மாணவியர் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற சுகாதார விழிப்புணர்வு பேரணி செவ்வாய்கிழமை நடைபெற்றது.


ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில், மாணவ மாணவியர் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற சுகாதார விழிப்புணர்வு பேரணி செவ்வாய்கிழமை நடைபெற்றது.
முழு சுகாதாரமான தமிழகம், நமது நகரம் தூய்மையான, பசுமையான நகரம் என்ற நோக்கத்துடன் இப் பேரணி நடைபெற்றது. பேரணியை ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளி முன்பு நகராட்சி ஆணையாளர் பழனிவேல் தலைமையில் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர் சுகாதார விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் நகரின் முக்கிய வீதிகள் வழியே வந்து ஸ்ரீஆண்டாள் சன்னதியை அடைந்தனர். மேலும் பேரணியின் போது விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
சுகாதாரா ஆய்வாளர்கள் தவிட்டுராஜன், பாஸ்கரன், கண்ணன் ஆகியோர் சுகாதாரத்தைப் பேண வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் விளக்கினர்.நிகழ்ச்சியில் ஏராளமான ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...